டிரெய்னை விட டிரெய்லர் ஸ்பீடா இருக்கு!.. Train டிரெய்லர் வீடியோ ரிலீஸ்...
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் டிரெய்ன். ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 படம் வெளியாகாத நிலையில் தற்போது டிரெய்ன் படம் உருவாகியிருக்கிறது.
இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். வருகிற டிசம்பர் 4ம் தேதி டிரெய்ன் திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
டிரெய்லர் வீடியோவை பார்த்தவர்கள் படத்தில் வேகமாக செல்லும் டிரெய்னை ட டிரெய்லர் வேகமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவுக்கு டிரெய்லர் பரபரப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எனவே கண்டிப்பாக டிரெய்ன் திரைப்படம் விஜய் சேதுபதிக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என கருதப்படுகிறது. ஏனெனில், டிரெய்ன் டிரெய்லர் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
