மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ட்ரெயின் மேக்கிங் வீடியோ!

 
Train

வழக்கமான கமர்ஷியல் மசாலா படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதை, திரைக்கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுத்து வருபவர் இயக்குநர் மிஷ்கின்.

இவரது இயக்கத்தில் திரையில் பயணிக்கத் தயாராக இருக்கும் படம் தான் 'ட்ரெயின்'. இதில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தான் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஆல்ரெடி இதன் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி விட்டது. தற்போது, படத்தின் மேக்கிங் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

இதில் மக்கள் செல்வனுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், நாசர், கலையரசன், நரேன், சம்பத்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதும் மிஷ்கின் தானாம்.

From Around the web