Categories: Cinema News latest news throwback stories

காலேஜ் படிக்கிறப்பவே பசங்களோட சண்டை போட்ட மிஷ்கின்!.. ஏ.ஆர்.ரகுமான்தான் எல்லாத்துக்கும் காரணம்

நரேன் நடிப்பில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஷ்கின். அந்த திரைப்படம்தான் நடிகர் நரேனுக்கும் முதல் திரைப்படம்.

சித்திரம் பேசுதடி திரைப்படம் மக்கள் மத்தியில் பிரபலமாக பிரபலமாக பேசப்படவில்லை என்றாலும் அதற்கு பிறகு மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே, யுத்தம் செய் போன்ற திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெற்றன.

தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார் மிஷ்கின். இடையே சில படங்களில் நடித்து தற்சமயம் நடிகராகவும் மாறியுள்ளார். மாவீரன், லியோ போன்ற திரைப்படங்களில் தற்சமயம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மிஷ்கின்.

மிஷ்கின் செய்த சண்டை:

சினிமாவிற்கு வந்த காலகட்டம் முதலே மிஷ்கின் இளையராஜா மீது பெரும் அன்பு கொண்டிருந்தார். இளையராஜாவின் பெரும் ரசிகர் என்று அவரை கூறலாம்.

கல்லூரி காலங்களில் இளையராஜாவின் இசைக்கு அடிமையாக இருந்ததாக ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார். இந்த காலகட்டத்தில்தான் ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அப்பொழுது கல்லூரியில் பலரும் ஏ.ஆர் ரகுமானை புகழ்ந்து பேசுவதை கண்டுள்ளார் மிஸ்கின்.

இதுக்குறித்து அவர் கூறும்போது நான் இளையராஜா ரசிகர் என்பதால் ஏ.ஆர் ரகுமானின் பாட்டை விட இளையராஜா பாட்டுதான் சிறந்தது என்று அவர்களிடம் சண்டை செய்து இருக்கிறேன். ஆனால் தனியாக இருக்கும் நேரங்களில் நானே பல தடவை ஏ.ஆர் ரகுமானின் பாட்டை கேட்டிருக்கிறேன் எப்படி இப்படி ஒரு பாடலை இந்த இளைஞனால் இசையமைக்க முடிந்தது என யோசித்து இருக்கிறேன் என ஏ.ஆர் ரகுமான் குறித்து மிஷ்கின் ஒரு பேட்டியில் பேசி உள்ளார்.

Published by
Rajkumar