×

பிசாசு 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மிஷ்கின்!

புதிய போஸ்டருடன் வெளியான பிசாசு 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

தமிழ் சினிமாவில் சைக்கோ உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் மிஷ்கின். வித்தியாசமான கோணத்தில் கதை, திரைக்கதை அமைப்பதால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. சைக்கோ திரைப்படத்திற்கு பின் இவர் நடிக்கும் படத்தை யார் இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில், பிசாசு 2 திரைப்படத்தை அவரே இயக்கவுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். நிச்சயம் இப்படத்தில் ஆண்ட்ரியா பேய் ரோலில் வந்து மிரட்டுவார் என கூறப்படுகிறது.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News