×

கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டிய ஓட்டுனர் மர்ம மரணம்!

தமிழகத்தின் மூன்று முதல்வர்களுக்கு ஓட்டுனராக பணியாற்றிய குமாரசாமி மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழகத்தின் மூன்று முதல்வர்களுக்கு ஓட்டுனராக பணியாற்றிய குமாரசாமி மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் டெல்லிக்கு செல்லும்போது அங்கே தங்குவதற்காக தமிழக அரசு இல்லம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கே பல ஆண்டுகளாக ஓட்டுனராக வேலை செய்து ஓய்வு பெற்றவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குமாரசாமி.

அவர் அங்கே பணியாற்றியபோது கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் எம் ஜி ஆர் ஆகிய மூன்று முதல்வர்கள் சென்றபோது அவர்களுக்கு ஓட்டுனராக பணியாற்றியவர். இப்போது ஓய்வு பெற்று சேலத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் அவரைக் காணவில்லை என்று குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதனடிப்படையில் போலிஸார் நடத்திய தேடுதலில் வாழப்பாடி அருகே கிணற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது சம்மந்தமாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News