×

மர்மம்..  திகில்.. கொலை -   கீர்த்தி சுரேஷின் விறுவிறுப்பான "பென்குயின்" டீசர்..!

கீர்த்தி சுரேஷின் "பென்குயின்" டீசர் ரிலீஸ்..!

 

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. அதன் பரவலை தடுக்க இப்போதைக்கு ஒரே வழி சமூக இடைவெளியை பின்பற்றுவது தான். இதனால் திரைத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.  பல படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அதே போல் நடிகை ஜோதிகா நடிப்பில், சூர்யா தயாரிப்பில் உருவான படம் "பொன்மகள் வந்தாள்". இந்த படம் OTT ஆன்லைன் தளங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்நிலையில் அடுத்து கீர்த்தி சுரேஷ் நடிக்கும் "பென்குயின்" படமும் ஜூன் 19 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவர் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார்.

இதனை இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்க, கார்த்திக் சுப்புராஜின் Stone Bench Films மற்றும் Passion Studios இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷின் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் சற்றுமுன்  இந்த டீசரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் நான்கு முன்னணி நடிகைகள் வெளியிட்டுள்ளனர். அதாவது, தமிழில் நடிகை திரிஷாவும், மலையாளத்தில் நடிகை மஞ்சுவாரியாரும், ஹிந்தியில் நடிகை டாப்ஸியும், தெலுங்கில் நடிகை சமந்தாவும் வெளியிட்டுள்ளனர். இதில் குடைபிடித்த மர்ம ஆசாமி ஒருவன் கீர்த்தி சுரேஷின் மகன் (அஜய்) கொன்றுவிட்டு  தனக்கு இரையாக்கி கொள்கிறான். விறுவிறுப்பான திகில் நிறைந்த இந்த டீசர் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News