×

நடிகையின் வீட்டிற்குள் பைப் வழியாக ஏறி குதித்த மர்ம நபர்... என்ன செய்தார் தெரியுமா?

பிரபல மராத்தி நடிகை சோனாலி குல்கர்னி. புனேவில் Pimpri Chinchwad பகுதியில் இருக்கும் இவரது வீட்டில் நபர் ஒருவர் ஏறி குதித்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. 

 
Dipika-Kakar-Sonalee-Kulkarni

பிரபல மராத்தி நடிகை சோனாலி குல்கர்னி. புனேவில் Pimpri Chinchwad பகுதியில் இருக்கும் இவரது வீட்டில் நபர் ஒருவர் ஏறி குதித்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. 

ஆம், இவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபருக்கு சுமார் 25 வயது இருக்கும், என கூறப்படும் நிலையில் அந்த நபர் தமது கையில் ஒரு கத்தி மற்றும் பொம்மை துப்பாக்கியுடன் வீட்டுக்குள் வந்துள்ளார். 

நடிகை சோனாலி குல்கர்னியின் வீட்டு பைப் வழியாக ஏறி குதித்து அந்த வீட்டுக்குள் நுழைந்த அந்த மர்ம நபர் அந்த வீட்டுக்குள் இருந்த நடிகை சோனாலி குல்கர்னியின் தந்தையை கத்தி மற்றும் துப்பாக்கியை காண்பித்து மிரட்டியுள்ளார். 

பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோட, அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நடிகையின் தந்தை போலீஸாரிடத்தில் பிடித்துக் கொடுத்ததை அடுத்து மர்ம நபர் போலீஸாரால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்.

தற்போது நடிகை சோனாலி குல்கர்னி துபாயில் தமது கணவருடன் இருக்கிறார் என்பதும், சோனாலி சி.ஏ படித்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடதக்கது. புனேவில் இருக்கும் இவரது வீட்டில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இந்த சம்பவத்தில் நடிகையின் தந்தைக்கு அந்த மர்ம நபரை பிடிக்க முயற்சிக்கும்போது சிறிய அளவிலான காயம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News