vijay seeman
தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட பின்னர் மக்களுக்காக அரசியல் களத்தில் குதித்துள்ளார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்து தொடர்ந்து அரசியல் களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தி தனது அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது மட்டுமல்லாமல் தனது அனல் பறக்கும் பேச்சால் தமிழக அரசியலில் சலசலப்பை உண்டு பண்ணினார்.
அதன் பிறகு மதுரையில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில் ஒட்டுமொத்த அரசியல் எதிரிகளுக்கும் கலக்கத்தை உண்டு பண்ணினார். தொடர்ந்து விஜய் அரசியல் களப்பணிகளில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முனைப்போடு செயல்பட்டு வருகிறார். அதற்காக தற்போது தமிழக முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் ஹெச்.வினோத் இயக்கத்தில் ’ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் 2026 பொங்கல் அன்று வெளியாக உள்ளது. இதுதான் தன்னுடைய கடைசி படம் என்று விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில் விஜய் இனி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும் தமிழக முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொள்வார் என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி பங்கேற்பதற்காக காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி வந்தடைந்தார்.
விஜய் திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து அவர் செல்ல இருந்த இடமான மரக்கடை வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. விஜய் பார்ப்பதற்காக ரசிகர்கள் காட்டாற்று வெள்ளம் போல் அவரை சூழ்ந்து கொண்டனர் இருப்பினும் விஜய் எறும்பு போல் ஊர்ந்து ஊர்ந்து மெதுவாக எப்படியோ மாலை 3 மணி அளவில் மரக்கடை வந்தடைந்தார். அதன் பின் அரியலூர் என்று இரவு 11 மணி வரை தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு இருந்தார்.
இந்நிலையில் இவரை பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கூட்டம் போகும் இடமெல்லாம் காத்துக் கொண்டிருந்தது. இதைப்பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சிக்கையில்,” நடிகர் அஜித்தை பொதுவெளியில் இறக்கினால் கூட மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தான் செய்வார்கள். இன்னும் அதிகமாகவே கூட்டம் கூடும். நடிகை நயன்தாராவுக்கு வராத கூட்டமா? எந்த சினிமா நடிகர் வந்தாலும் அவரைப் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும். திரையில் பார்த்தவர்களை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் மக்கள் வரத்தான் செய்வார்கள். கொள்கை கட்சிகளை கொலை செய்கிறீர்கள்” என்று சீமான் கமெண்ட் அடித்துள்ளார்.
விஜய் டிவியில்…
Bison: நடிகர்…
Simbu-Dhanush: தமிழ்…
SMS: கடந்த…
கோமாளி படம்…