×

நான் திக்கு வாய்... பேசவே பயப்படுவேன்! உள்ளம் உடைந்து பேசிய சோமு!

பிக்பாஸ் அறிமுக நிகழ்ச்சியிலேயே யாருப்பா இவரு? என ரசிகர்கள் மத்தியில் கேள்வியெழ வைத்தவர் சோமசேகர். நடிகர், மாடல், தற்காப்பு கலைஞர் என பன்முகங்களை கொண்டிருக்கும் சோமசேகர் ஒரு பிரேக் வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
 

தாங்கள் கடந்து வந்த பாதை நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,'' சிறிய வயதில் இருந்து தனக்கு திக்குவாய் பிரச்சினை இருந்ததால் யாருடனும் சரியாக பேச மாட்டேன். இங்கு அனைவரும் என்னுடைய வாய்ஸ் நன்றாக இருப்பதாக கூறுகிறீர்கள். இந்த பிரச்சினை வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக யாரும் போன் செய்தால் கூட எடுக்க மாட்டேன்.

அதற்காக நான் அனைவரிடமும் ஸாரி கேட்டு கொள்கிறேன். 5 வருடங்கள் காதலித்த, 2 வருடங்களுக்கு முன்னால் பிரேக்கப் ஆகிவிட்டது என்றார். இதைக்கேட்டு சக போட்டியாளர்கள் அனைவரும் உணர்ச்சி வசப்பட்டது பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது. எனினும் கடைசியில் ஒரு பாடல் பாடி தன்னுடைய உரையை இனிதாகவே சோம் முடித்தது குறிப்பிடத்தக்கது.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News