Categories: Cinema News latest news

பத்திரிக்கை செய்தியை பார்த்து தயாரிப்பாளரிடம் கொந்தளித்த நதியா… அப்படி அதுல என்னதான் இருந்தது?

“வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் மாறல” என்று “படையப்பா” திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ரஜினியை பார்த்து ஒரு வசனத்தை கூறுவார். இந்த வசனத்திற்கு நிஜ வாழ்க்கையில் உதாரணமாக திகழ்ந்து வருபவர் நதியா. எவ்வளவு வயதானாலும் இப்போதும் இளமையாகவே வலம் வருகிறார்.

Nadhiya

நதியா மலையாளத்தில் “நொக்கத்தேதூரத்து கண்ணும் நட்டு” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்துவைத்தார். அதனை தொடர்ந்து பல மலையாளத் திரைப்படங்களில் நடித்த நதியா, தமிழில் “பூவே பூச்சூடவா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் பல திரைப்படங்களில் நடித்த நதியா அப்போதைய இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார்.

இந்த நிலையில் 1988 ஆம் ஆண்டு “இரண்டில் ஒன்று” என்ற திரைப்படத்தில் நதியா கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை முதலில் சென்சார் போர்டு சில காரணங்களால் தடை செய்திருந்தது. இதனை தொடர்ந்து அப்போது வெளிவந்துகொண்டிருந்த ஒரு பத்திரிக்கையில் “நதியா திரைப்படத்திற்கு தடை” என்ற தலைப்புடன் அச்செய்தியை வெளியிட்டிருந்தார்களாம்.

Chitra Lakshmanan

இதன் பின் ஒரு முறை சினிமா எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிக்கைக்காக சித்ரா லட்சுமணன், நதியாவை பேட்டி எடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது நதியா அவரிடம் “சார், நான் இரண்டில் ஒன்றுன்னு ஒரு படத்துல நடிச்சேன். அந்த படத்துல சில பிரச்சனைகள்னால சென்சார் போர்டு அதுக்கு தடை விதிச்சிருந்தாங்க. இப்போ பத்திரிக்கையில் செய்தி போடும்போது ‘இரண்டில் ஒன்று படத்திற்கு தடை’ அப்படின்னுதானே சார் செய்தி போடனும். ‘ஆனால் நதியா படத்திற்கு தடை’ அப்படின்னு போடுறாங்க. இப்படி தலைப்பு போடுறதுல என்ன நியாயம்?” என்று கேட்டாராம்.

அதற்கு சித்ரா லட்சுமணன், “அந்த படத்துல நடிச்சதிலேயே நீங்கதானே பாப்புலரான நடிகர்” என்று சொன்னாராம். அதற்கு நதியா “அந்த படத்தில் ரகுவரனும் நடித்திருந்தாரே” என்று கூறினாராம்.

அப்போது சித்ரா லட்சுமணன், “ரகுவரன் அந்த படத்தில் நடிச்சிருந்தாலும், அதை தாண்டி நீங்கள்தானே அந்த படத்தில் நடித்ததிலேயே பாப்புலர் நடிகர். அதனால்தான் அப்படி செய்தி போட்டிருக்கிறார்கள்” என கூறினாராம்.

Nadhiya

அதற்கு நதியா “சார், அந்த மாதிரி தலைப்பு போடுறதுனால பாக்குறவங்க நதியா ஆபாசமா நடிச்சதுனாலத்தான் அந்த படத்தை தடை பண்ணாங்கன்னு நினைச்சிக்குவாங்க” என்று கூறினாராம். அதற்கு சித்ரா லட்சுமணன் “உங்களது புகைப்படத்தை போஸ்டர்களில் பெருசு பெருசா போட்டு விளம்பரம் பண்ணாங்களே, அத்தனை நடிகர்கள் அந்த படத்தில் இருக்கும்போது ஏன் என்னுடைய படத்தை மட்டும் பெருசா போடுறீங்கன்னு நீங்க என்னைக்காவது கேட்டிருக்கீங்களா? பாப்புலாரிட்டிக்கு நீங்க கொடுக்குற விலை அது. யார் பாப்புலராக இருக்கிறார்களோ அவர்களை பயன்படுத்தி திரையரங்கிற்கு ஆட்களை இழுத்து வருவதற்கான உத்தி அது” என்று அவருக்கு தெளிவுப்படுத்தினாராம். அதன் பின் நதியாவும் அவர் சொல்வதை கேட்டுக்கொண்டாராம்.

இதையும் படிங்க: இந்த மாஸ் ஹிட் படத்தையா அர்ஜூன் வேண்டாம்ன்னு சொன்னாரு… அடக்கொடுமையே!!

Arun Prasad
Published by
Arun Prasad