தமிழ் சினிமாவுக்கு எப்போதும் ஓர் சாபம் உண்டு. அதாவது நன்றாக நடிக்க தெரிந்த ஹீரோயின்கள் நீண்ட காலம் சினிமாவில் இருக்க மாட்டார்கள். அதுவும் கிளாமர் காட்டாத நல்ல ஹீரோயின்களை பெரும்பாலான பட நிறுவனங்கள் கண்டுகொள்வதேயில்லை.
அப்படி பல ஹீரோயின்கள் காணாமல் போய் உள்ளனர். அதில் ரீசெண்டாக நஸ்ரியா என கூறலாம். அறிமுகமான சில வருடங்களில் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துவிட்டார். இவர் இதுவரை கவர்ச்சி காட்டி நடித்ததில்லை. சீக்கிரமே திருமணம் செய்துகொன்டு செட்டிலாகிவிட்டார்.
நடிகை ஸ்ரீ திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தவர். இவர் கவர்ச்சி காட்டி நடிக்காததால், அடுத்தடுத்த படங்களில் இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன் – 25 வருடம் கழித்து வெளியான ரகசியம்.! மணிவண்ணனை கட்டுப்படுத்திய ஒரே நபர் இவர்தானாம்.!
கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால் நடிகை நதியாவை குறிப்பிட்டு சொல்லலாம். இவர் நடிக்கும் போதே கண்டிஷன் போட்டு விடுவாராம். அதாவது, நாயகர்களுடன் டூயட் பாடுவேன். ஆனால் நெருக்கமான காட்சிகள், முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கறாராக கூறிவிடுவாராம். அதனாலேயே அவர் நன்றாக நடித்திரிருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் அவரால் முன்னணி நாயகி வரமுடியவில்லை என கூறப்படுகிறது.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…