Happy Birthday பொண்டாட்டி... வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய நாக சைதன்யா!

 
naga chaitanya sobhita dhulipala

நாக சைத்தன்யா - சோபிதா:

தெலுங்கு சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருபவர்கள் தான் நடிகர் நாக சைத்தன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஹைதராபாத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலை திருமணம் செய்து கொண்டனர்.

naga chaitanya

அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நடிகை சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு நாக சைதன்யா தனது இரண்டாவது காதலியான சோபிதாவுடன் வாழ்க்கையை தொடங்கி மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். 

பிறந்தநாள் வாழ்த்து: 

இந்நிலையில் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கு நடிகர் நாக சைதன்யா இன்ஸ்டாகிராமில் அவருடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் .

naga chaitanya

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது என்னுடைய பெண்ணே உன்னுடன் வாழ நான் கொடுத்து வைத்திருக்கிறேன் என்று அதீத காதலோடு தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார். அதில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் ஒன்றில் சோபிதாவின் கழுத்தை நெறிப்பது போல் இருக்கிறது.

naga chaitanya

இதை பார்த்து நெட்டிசன்ஸ் "தலைவா உனக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்தி தான்.  இருந்தாலும் எங்க அண்ணிக்கு வாழ்த்து சொல்லிடுங்க என்ன ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த பதிவுக்கு நடிகை சோபிதா துலிபாலா தேங்க்யூ பங்காரம் என பதில் அளித்திருக்கிறார்.

Tags

From Around the web