சமந்தாவை நான் ஏமாற்றினேனா? உயர்நீதிமன்றத்தில் நாக சைதன்யா வழக்கு!

 
samantha naga chaitanya

சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து: 

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஹேமாயா சேஷாவே திரைப்படத்தில் நடித்த போது காதலிக்க துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது .

samantha

கோவாவில் திருமணம் செய்து கொண்ட பிறகு 2021 ஆம் ஆண்டில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரித்து விட்டார்கள். அதன் பிறகு நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிருமோடி என்பவரை காதலித்து கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி ஈசா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டார் .

நான் ஏமாற்றினேனா? 

இதே போல் நடிகர் நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துக்கொண்டார் அவரவர் வெவ்வேறு வாழ்க்கையில் தற்போது சென்று விட்டனர். ஆனாலும் சமந்தா மற்றும் நாக சைதன்யா  ஜோடி பிரிந்ததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்போது நாக சைதன்யா தான் சமந்தாவை ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் விமர்சித்து வந்தனர் .

தொடர் விமர்சனங்களை கண்டு கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நடிகர் நாக சைதன்யா இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் . தன்னுடைய முன்னாள் மனைவி மற்றும் என்னுடைய பெயரும் குறிப்பிட்டு பொய்யான தகவலை பரப்பி வரும் YouTube சேனல்களை முடக்க வேண்டும் என்றும் கூகுளில் இது சம்பந்தமான செய்திகள் வெளி வருவது உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு பர்சனாலிட்டி ரைட்ஸ் பாதுகாக்க வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. 

naga chaitanya sophita

நாக சைதன்யா வழக்கு:

மேலும் YouTube மற்றும் google தளங்கள் 8-வது எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தொடர்ந்தது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விளக்கம் அளிக்கும்படி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும் குற்றச்சாட்டப்பட்ட மற்ற தளங்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 30-ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல் கிடைத்திருக்கிறது. 

Tags

From Around the web