விஸ்வநாத் அண்ட் கோ 200 சதவீதம் பிளாக்பஸ்டர்தான் - அட முதல் விமர்சனமே இப்படி இருக்கே

சூர்யா நடிப்பில் அடுத்து வெளி வர உள்ள படம் விஸ்வநாத் அண்ட் கோ படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்துள்ளது.
 
viswanath and co

சூர்யா நடிப்பில் அடுத்து வெளி வர உள்ள படம் விஸ்வநாத் அண்ட் கோ படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்துள்ளது.

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய இந்த படத்தில் சூர்யாவுடன் திரிஷா, நட்டி, இந்திரன் என பல்ர் நடித்திருந்தனர். கடந்த மே 14ல் வெளியான இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. கிட்டத்தட்ட 340 கோடி வரை வசூல் செய்தது இந்த படம். கருப்பு படத்தின் வெற்றி சூர்யாவின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த நிலையில் சூர்ர்யா நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் விஸ்வநாத் அண்ட் கோ. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ , ராதிகா உள்ளிட்ட பல்ர் நடித்துள்ளன்ர். ஜி.வி.பிரகாஷ் இசையில் சமீபத்தில் வெளியான பட்டாம் பூச்சி பாடம் செம ஹிட் அடித்துள்ளது. பல ஈஅலசுகள் ரீல்சுகளில் ஆட்டம் போட்டு வருகின்றனர்.

viswanath and co

இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் கோ படத் தயாரிப்பாளர்  நாக வம்சி சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அப்போது விஸ்வநாத் அண்ட் கோ படம் குறித்து பேசுகையில்,  நான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை முழுவதும் பார்த்துவிட்டேன். இந்தப் படம் 200 சதவீதம் ப்ளாக் பஸ்டர் ஆகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த படத்தை அனைத்து ரசிகர்களும்  நிச்சயம் ரசிப்பார்கள். இது உறுதியான வெற்றிப்படம் என்று கூறியுள்ளார். நாக வம்சியின் இந்த பேட்டி சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.

விஸ்வநாத் அண்ட் கோ வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web