1. Home
  2. Latest News

இப்படியொரு காம்ப்ளிமெண்ட்டா? நாகர்ஜூனா பேச்சால் தலைகால் புரியாமல் ஆடும் பிரதீப்

nagarjuna
பிரதீப் ரெங்கநாதனை புகழ்ந்த நாகர்ஜூனா.. இது போதுமே நம்ம சுள்ளானுக்கு

தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் பிரதீப் ரெங்கநாதன். இவர் நடிகராக மாறுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து ஹீரோவாக வெற்றிப்படங்களையே கொடுத்து வரும் பிரதீப் தனது வெற்றிக்கு காரணம்  கடவுளின் கருணையே என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். விஜய் அடுத்து அரசியலுக்கு போகும் நிலையில் விஜயின் இடத்தை யார் பிடிக்க போகிறார் என்ற ஒரு கேள்வி கோடம்பாக்கத்தில் இருந்துவருகிறது.

அதற்கேற்ப அடுத்த இளம் தலைமுறை நடிகர்களின் படங்களும் அடுத்தடுத்து மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மணிகண்டன், ஹரீஸ் கல்யாண், பிரதீப் என தொடர்ந்து வெற்றிப்படங்களையே கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அஜித் விஜய் இடத்தை பிடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. 30 வருட உழைப்புதான் அவர்களை இந்த நிலையில் கொண்டு வந்து நிற்கின்றது என்றும் பிரதீப் கூறியிருந்தார்.

முதலில் இயக்குனராக அறிமுகமான பிரதீப் இரண்டாவது படத்திலிருந்தே ஹீரோவாக களமிறங்கினார். லவ் டுடே படத்தை அவரே இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்தார். அதன் பிறகு அவர் படங்களை இயக்கவே இல்லை. தொடர்ந்து மற்ற இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் டியூட் படம் வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றது.

தீபாவளி ரீலிஸாக டியூட் படம் வரும் 17 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. இந்தப் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு இயக்குனராக சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தை எடுக்க இருப்பதாக தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. ரஜினி கமல் இணையும் படத்தையும் இவர்தான் எடுக்க போகிறார் என்ற ஒரு கருத்தும் பரவி வருகின்றது. விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் எல். ஐ. கே என்ற படத்தில் பிரதீப் நடித்து வருகிறார். 

முதலில் எல்.ஐ.கே படம் தான் வெளியாக வேண்டியது. ஆனால் டியூட் படத்திற்காக அந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளனர். ஹீரோ மெட்டிரியல் இல்லை என்ற கேள்விக்கும் நான் ஏற்கனவே ஹீரோவாகி விட்டேன் என்று பதில் அளித்திருந்தார் பிரதீப். இந்த நிலையில் பிரதீப் பற்றி தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனா சொன்ன ஒரு தகவல் இப்போது வைரலாகி வருகின்றது.

ஒரு காலகட்டத்தில் ரஜினி வந்து சினிமாவின் போக்கையே மாற்றினார். அதன் பிறகு அந்த முறையை தனுஷ் மாற்றினார். இப்போது மீண்டும் ஒரு மாற்றத்தை உங்களில் நான் பார்க்கிறேன் என பிரதீப்பை பார்த்து நாகர்ஜுனா கூறியிருக்கிறார். இதை கேட்டதும் பிரதீப் மகிழ்ச்சியில் ‘உங்கள் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தையை கேட்கும் போது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்’ என கூறினார்.