Nagesh
நாகேஷ் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். நாகேஷின் உடல் மொழியும் வசனங்கள் பேசுகிற விதமும் ரசிகர்களை வெகுவாக கட்டிப்போட்டது. அவர் ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாது ஒரு மிகச் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தார்.
இந்த நிலையில் நாகேஷ் ஒரு இயக்குனராகும் தகுதி படைத்தவர் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அச்சம்பவத்தை குறித்து தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான இயக்குனர் எல்.வி.பிரசாத் ஒரு திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். அத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஒரு பணக்கார தாயார் இறந்துபோய்விடுவார். அந்த காட்சியில் அந்த வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்கார கதாப்பாத்திரம் கதறி கதறி அழுவது போல் ஒரு காட்சி இருந்தது.
அந்த காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தபோது கேமரா பின்னால் இருந்து எல்.வி.பிரசாத் “இன்னும் நன்றாக அழு” என்று அந்த கதாப்பாத்திரத்திற்கு ஹிண்ட் கொடுத்துக்கொண்டு இருந்தார். அதனை பார்த்த நாகேஷ், “கட் சொல்லுங்க” என்று கத்தினாராம்.
எல்.வி.பிரசாத் ஏன்? என்று கேட்க, “சார். இறந்துப்போனது வீட்டு எஜமானி. அந்த அம்மாவோட புருஷன் அந்த அம்மாவோட பசங்க கூட இந்த அளவுக்கு அழுகவில்லை. அப்படி இருக்க இந்த வேலைக்காரன் இப்படி அழுதால், பார்வையாளர்களுக்கு சந்தேகம் வந்துடாதா?” என கேட்டிருக்கிறார்.
நாகேஷ் கேட்டதில் நியாயம் இருப்பதை உணர்ந்துகொண்டார் எல்.வி.பிரசாத். அதன் பின், நாகேஷ், “அந்த அம்மா இறந்த துக்கம் தாங்கமுடியாமல், அந்த வேலைக்காரன் தான் வைத்திருக்கும் துண்டை எடுத்து வாயில் பொத்திக்கொண்டே போவதுபோல் படமாக்கினால் நன்றாக இருக்கும்” எனவும் யோசனை கூறினார்.
எல்.வி.பிரசாத்தும் நாகேஷ் சொன்னது போலவே படமாக்கினார். அதன் பின் நாகேஷை, “நீ இயக்குனராக ஆவதற்கு தகுதியானவன்” எனவும் பாராட்டினாராம் எல்.வி.பிரசாத்.
இதையும் படிங்க: யார்கிட்டயும் கடன் வாங்க மாட்டேன்.. அத வித்து தான் பொழப்பையே ஓட்டுனேன்.. கௌதம் கார்த்திக்கு இப்படி ஒரு நிலைமையா?..
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…