Categories: Cinema News latest news

கிரிக்கெட் கிரவுண்ட்டில் வடக்கூரானை அடித்து உருளவைத்த நாகேஷ்… நகைச்சுவை லெஜண்ட்டின் மறுபக்கம்..

தமிழின் பழம்பெரும் நகைச்சுவை நடிகரான நாகேஷை குறித்து சொல்லவே தேவை இல்லை. தற்போதுள்ள காமெடி நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்பவர் நாகேஷ்.

சிவாஜி கணேசன், எம்ஜிஆர் என கிளாசிக் நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடியில் கலக்கியவர். காமெடி நடிகர் மட்டுமல்லாது சிறந்த குணச்சித்திர நடிகரும் கூட. “தில்லானா மோகனாம்பாள்” திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் கலக்கிய நாகேஷ், “அபூர்வ சகோதரர்கள்” திரைப்படத்தில் காமெடி கலந்த டெரிஃபிக் வில்லனாக வெளுத்து வாங்கியிருப்பார்.

நாகேஷ் சிறப்பாக நடனமும் ஆடுவார். குறிப்பாக அவர் நடனமாடிய “அவளுக்கென்ன” என்ற பாடல் இப்போதும் மிக பிரபலமான ஒன்று. என்னதான் காமெடி நடிகர்கள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும் அவர்களுக்கு மறுபக்கம் என்று ஒன்று இருக்கும். ஒரு மனிதன் 24 மணி நேரமும் சிரித்துக்கொண்டே இருக்கமுடியாதல்லவா. காமெடி நடிகர்கள் என்றாலும் அவர்களும் ஒரு சாதாரண நடிகர் தானே.

இதற்கு நாகேஷும் விதிவிலக்கல்ல. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை தான் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் அவரது மகன் ஆனந்த் பாபு பகிர்ந்திருந்தார்.

அதாவது ஒரு நாள் நாகேஷும் ஆனந்த் பாபுவும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக சேப்பாக்கம் கிரவுண்ட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது அங்குள்ள ஜனங்கள் நாகேஷை பார்த்தவுடன் கும்பலாக கூடிவிட்டார்களாம். ஒவ்வொருவரும் ஆட்டோகிராஃப் வேண்டும் என கேட்டு நாகேஷை சுற்றி வளைத்திருக்கிறார்கள்.

அப்போது அங்கே பணிபுரிந்துக்கொண்டிருந்த ஒரு ஹிந்திக்காரர் அங்கு கூடியிருந்த ஜனங்களை தகாத வார்த்தைகள் கூறி அவர்களை விரட்டிக்கொண்டிருந்திருந்திருக்கிறார். அதனை பார்த்து கடும் கோபம் கொண்ட நாகேஷ், அந்த ஹிந்திக்காரரின் தலையை பிடித்து வேகமாக தள்ளிவிட்டாராம். அங்கே உள்ள படிகளில் அந்த ஹிந்திகாரர் உருண்டு போய் விழுந்தாராம்.

எப்போதும் கலகலப்பாகவே தென்படும் நாகேஷிற்கு இந்தளவுக்கு கோபம் வரும் என்பது வியக்கத்தக்க செய்தியாக இருக்கிறது.

Arun Prasad
Published by
Arun Prasad