Categories: Cinema News latest news throwback stories

சிகரெட் இல்லாமல் தவித்த நாகேஷ்!.. படக்குழுவை அல்லோலப்பட வைத்த சம்பவம்.. மெய்யப்பச்செட்டியார் எடுத்த திடீர் முடிவு..

ஒரு சமயம் தயாரிப்பு கவுன்சில் எல்லாம் சேர்ந்து இனிமேல் நடிகர்களுக்கு சிகரெட் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்ற முடிவை அந்த காலத்தில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் முடிவை எடுத்தவர்கள் நடிகர்களை அழைத்து இந்த மாதிரி முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தால் அவர்களுக்கு தெரிய வந்திருக்கும்.

ஆனால் தயாரிப்பு கவுன்சில் மட்டுமே சேர்ந்து எடுத்த முடிவு என்பதால் யாருக்குமே தெரியப்படுத்தவில்லையாம். மறு நாள் நடிகர் நாகேஷ் படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறார். நாகேஷ் ஒரு சிகரெட் பிரியர். எப்போதுமே சிகரெட் பிடிப்பதை வழக்கமாக கொண்டவர் நாகேஷ். அதனால் வந்ததுமே கேட்டிருக்கிறார். ஆனால் அங்கு இருந்தவர்கள் சிகரெட் கொடுக்கக் கூடாது என்று முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பதை கூறியிருக்கிறார்கள்.

nagesh1

கேட்டதும் பதறாத நாகேஷ் சாதாரணமாக இருந்திருக்கிறார். அதன் பிறகு ஷார்ட் ரெடி என்று இயக்குனர் சொன்னதும் நாகேஷை அழைக்க ஊழியர் செல்ல நாகேஷை காணவில்லையாம். உடனே இயக்குனரும் தேடியிருக்கிறார். அவர் இல்லையாம். எல்லா இடங்களில் தேடியும் நாகேஷ் வரவில்லையாம்.கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து வந்திருக்கிறார்.

இதையும் படிங்க : பிரபல பாலிவுட் இயக்குனருடன் கைக்கோர்க்கும் சிவகார்த்திகேயன்!!.. மாஸ் அப்டேட்டா இருக்கேப்பா…

கடுப்பாகி போன இயக்குனர் எங்கு சென்றீர்கள் என்று கேட்க நாகேஷ் சிகரெட் வாங்க கடைக்குச் சென்றேன். டாக்சி பிடித்து சென்றேன். அதன் பின் டாக்‌ஷிக்கு பைசா கொடுக்க காசு இல்லை என்பதால் வீட்டில் போய் எடுத்துக் கொடுத்து விட்டு வந்தேன் என்று கூறியிருக்கிறார். இவர் சொன்னதை கேட்டு அதிர்ந்த அந்த இயக்குனர் தயாரிப்பாளரிடம் சொல்லியிருக்கிறார்.

nagesh2

அவரும் ஒரு சிகரெட்டால் கிட்டத்தட்ட 2 மணி நேரம் காலதாமதம் ஏற்படுவதுடன் நமக்கு 10000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இனிமேல் அவர்கள் கேட்பதை கொடுத்து விடுங்கள் என்று கவுன்சில் எடுத்த முடிவை தளர்த்தியிருக்கிறார் அந்த தயாரிப்பாளர். அவர் வேறுயாருமில்லை ஏவிஎம். மெய்யப்பச்செட்டியாராம். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.

Published by
Rohini