×

மைனா பட நடிகையை பிளாக் செய்த நக்மா – ஒரு மீம்தான் காரணமா?

மைனா படத்தில் கொடூரமான வில்லி கதாபாத்திரத்தில் நடிகை சுசானாவை நக்மா தனது டிவிட்டர் பக்கத்தில் பிளாக் செய்துள்ளார்.

 
மைனா பட நடிகையை பிளாக் செய்த நக்மா – ஒரு மீம்தான் காரணமா?

மைனா படத்தில் கொடூரமான வில்லி கதாபாத்திரத்தில் நடிகை சுசானாவை நக்மா தனது டிவிட்டர் பக்கத்தில் பிளாக் செய்துள்ளார்.

நடிகை நக்மாவும் கங்குலியும் காதலிப்பதாக வெளியான செய்திகளை 2000 ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் பார்த்த ரசிகர்கள் நன்றாக அறிவார்கள். பத்திரிக்கைகளுக்கு தீனி போடும் விதமாக இருவரும் ஒன்றாக பல கோயில்களுக்கு சென்று பூஜைகளையும் செய்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் தாங்கள் காதலிக்கவில்லை என இருவரும் சொல்லி பிரிந்தார்கள். அதன் பின் நக்மா அரசியலில் இறங்கி தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி கங்குலியின் பிறந்தநாளுக்கு நக்மா வாழ்த்து தெரிவித்தது கடந்தகால சர்ச்சைகளுக்கு மீண்டும் தூசு தட்டியது போல ஆனது. நக்மாவின் இந்த டிவீட்டுக்கு ரசிகர்கள் பலரும் கங்குலியைப் பற்றி பேசியுள்ளனர். அதில் ஒரு ரசிகர் அந்த டிவிட்டுக்கு கமெண்ட் செய்தபோது  அந்த டிவீட்டில் கங்குலியின் மனைவியை டேக் செய்யுங்கள் எனக் கூறி ஒரு மீமை பதிவிட்டார். அந்த மீம் என்னவென்றால் மைனா படத்தில் வில்லியாக நடித்த சுசானா கோபமாக அமர்ந்திருக்கும் புகைப்படம்தான். இதனால் நக்மா அந்த ரசிகரை பிளாக் செய்தது மட்டுமில்லாமல், நடிகை சுசானாவையும் பிளாக் செய்துள்ளார். இது குறித்து பலரும் சுசானாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News