×

ஐபிஎல் 2021 - சி.எஸ்.கே-வின் மாஸ்டர் பிளான் கைகொடுக்குமா?

கொரோனா காலத்திலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐபிஎல் 2020 சி.எஸ்.கே ரசிகர்களுக்கு மறக்க வேண்டிய ஆண்டாக மாறியிருந்தது. 
 

ஐபிஎல் தொடரின் 11 வருட வரலாற்றில் சி.எஸ்.கே இல்லாத ப்ளே ஆஃபாக அமைந்துவிட்டது 2020 ஐபிஎல். ஃபீல்டிங் சொதப்பல்கள், பேட்டிங் குளறுபடி, ஃபார்ம் இல்லாத வீரர்கள் என ஏகத்துக்கும் சொதப்பியது தோனியின் மஞ்சள் படை. இதனால், 2021 ஐபிஎல் தொடரை ஏகப்பட்ட மாற்றங்களோடு எதிர்க்கொள்ள இப்போதே தயாராகிவிட்டது சி.எஸ்.கே. ஐபிஎல் வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. வீரர் ஒருவரின் பேஸ் விலை 20 லட்ச ரூபாய் என்ற நிலையில், சி.எஸ்.கே வசம் மீதமிருக்கும் தொகை 15 லட்ச ரூபாய் மட்டுமே. இதனால், 7 முதல் 8 வீரர்களைக் கழற்றிவிடும் முடிவில் இருக்கிறது சி.எஸ்.கே நிர்வாகம்.

அந்தப் பட்டியலில் முதல் ஆளாக கேதர் ஜாதவ் இருப்பதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் தகவல்கல் உலாவத் தொடங்கியிருக்கின்றன. இதனால், சென்னை அணிக்கு ரூ.7.8 கோடி மிச்சமாகும். அதேபோல், 6.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பியூஷ் சாவ்லா, ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கரண் ஷர்மா, ரூ.2 கோடி மதிப்பிலான இம்ரான் தாஹிர் போன்றோரின் ஒப்பந்தத்தையும் முடித்துக் கொள்ள சி.எஸ்.கே நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

மேலும், ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோவுக்கும் கல்தா கொடுக்கப்படலாம் என்கிறார்கள். இதனால், அணிக்கு புது ரத்தம் பாய்ச்ச முடிவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதேநேரம், 2021 ஐபிஎல் தொடரில் `தல’ தோனி விளையாடுவது உறுதி என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். 

மீண்டு வா சி.எஸ்.கே!

From around the web

Trending Videos

Tamilnadu News