×

ஒரே ஜாலி தான்... கல்யாண குஷியில் மூழ்கி கிடக்கும் நக்ஷத்திரா!
 

வருங்கால கணவருடன் நக்ஷத்திரா நாகேஷ் வெளியிட்ட போட்டோஸ்!
 
 
ஒரே ஜாலி தான்... கல்யாண குஷியில் மூழ்கி கிடக்கும் நக்ஷத்திரா!

தமிழில் ஷார்ட் பிலிம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நக்ஷத்திரா நாகேஷ். அதன்பின்னர், திருமணம், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தமிழக வீடுகளின் செல்ல மகள் ஆனார்.  கடந்த பல ஆண்டுகளாக சின்னத்திரையில் இருந்தாலும் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்துவந்த இவர், அண்மையில் சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றைக் கொடுக்கப்போவதாக நேற்று இன்ஸ்டாவில் அறிவித்திருந்தார்.

அதில், `இன்ஸ்டாவுக்கு நான் அறிமுகமாகும்போது டீனேஜர். முதலில் நண்பர்களை ஃபாலோ செய்துக்கொண்டிருந்தேன். அவர்களுடன் எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தேன். அதன்பின்னர், நடிகையானதும் இன்ஸ்டா குடும்பம் பெரிதானது.அண்மையில் ஒரு சர்ப்ரைஸான அறிவிப்பை வெளியிடப்போகிறேன்’ என்று கூறி "ராகா" என்ற தனது காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

திடீரென காதலரை அறிமுகப்படுத்திய ஷாக்கில் இருந்தே மீண்டு வராத ரசிகர்களுக்கு அடுத்த இரண்டு நாளில் நக்ஷத்திரா- ராகவ் ஜோடிக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது திருமணத்திற்காக காத்திருக்கும் இந்த காதல் ஜோடி அவ்வப்போது ரொமான்டிக்கான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். கட்டியணைத்தபடி காதலில் மூழ்கிய இந்த போட்டோவுக்கு லைக்ஸ் அள்ளியுள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News