×

திருமண வீடியோவை வெளியிட்ட நக்‌ஷத்ரா - குவியும் வாழ்த்துக்கள்

 

தமிழில் குறும்படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நக்‌ஷத்ரா நாகேஷ். அதன்பின்னர், திருமணம், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தமிழக வீடுகளின் செல்ல மகள் ஆனார். 
கடந்த பல ஆண்டுகளாக சின்னத்திரையில் இருந்தாலும் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்துவந்த இவர்,  ஒரு சர்ப்ரைஸான அறிவிப்பை வெளியிடப்போகிறேன்’ என்று கூறி "ராகா" என்ற தனது காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

திடீரென காதலரை அறிமுகப்படுத்திய ஷாக்கில் இருந்தே மீண்டு வராத ரசிகர்களுக்கு அடுத்த இரண்டே நாளில் நக்‌ஷத்ரா- ராகவ் ஜோடிக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும், இருவரும் சேர்ந்து ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களும் வெளியானது.

இந்நிலையில், திருமணம் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை நக்‌ஷத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இதைத்தொடர்ந்து பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News