×

நாய், பூனையுடன் மனைவிக்கு வளைகாப்பு நடத்திய நகுல்!

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர் தனது குண்டு உடலை குறைத்து ஸ்லிம் ஆகி காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

நடிப்பு மட்டுமன்றி பாடுவதிலும் திறமைமிக்கவராக இருந்து வரும் நகுல் அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடகராக இருந்துள்ளார். தற்போது சரியான வாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

அண்மையில் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் நகுல் அன்றைய தினத்தில் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறி ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் லாக்டவுனில் தான் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி, பூனைக்குட்டிகளுடன் மட்டும் சீமந்தம் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு பலரது ஆசீர்வாதத்தை பெற்று வருகின்றனர் நகுல் - ஸ்ருதி தம்பதி.

From around the web

Trending Videos

Tamilnadu News