Connect with us
nakul wife

Cinema News

வீடியோ அனுப்பி டார்ச்சர் பண்றாங்க… கதறும் பிரபல நடிகரின் மனைவி….!

திரையுலகில் டாப் நடிகராக வலம் வரும் நடிகர் மற்றும் நடிகைகளை விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் சமீபகாலமாக இந்த விமர்சனங்கள் சற்று எல்லை மீறி பிரபலங்கள் மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினரையும் விமர்சிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகரின் மனைவிக்கு சிலர் ஆபாச மெசேஜ் அனுப்பி டார்ச்சர் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி பாய்ஸ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் நகுலின் மனைவிக்கு தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

nakul

பாய்ஸ் படத்தை தொடர்ந்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நகுல் பல டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். நகுலுக்கு ஸ்ருதி என்ற மனைவியும், அகிரா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் நகுலின் மனைவி ஸ்ருதிக்கு மர்ம நபர்கள் சிலர் ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை தருவதாக சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “ஆ வீடியோக்களுடன் ஐ லவ் யு என அனுப்புகிறார்கள்.

nakul wife suruthi

எப்படி இந்த மாதிரி தெரியாத ஒரு பெண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிவிட்டு ஐ லவ் யூ என மெஸேஜும் அனுப்புகிறார்கள். இது எனக்கு முதல் முறை இல்லை. பலமுறை இதுபோல ஆபாச வீடியோக்கள் வந்துள்ளன” என கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top