×

ரோட்ல விட்டு நாலா பொளந்துருவன்… சொந்த கட்சிக்காரரையே மிரட்டும் திமுக பிரமுகர்!

திமுகவில் அதிகாரப் போட்டி காரணமாக எம் எஸ் குமார் என்பவர் தன் சொந்தக் கட்சிக்காரரையே மிரட்டியுள்ள ஆடியோ வெளியாகியுள்ளது.

 

திமுகவில் அதிகாரப் போட்டி காரணமாக எம் எஸ் குமார் என்பவர் தன் சொந்தக் கட்சிக்காரரையே மிரட்டியுள்ள ஆடியோ வெளியாகியுள்ளது.

தேர்தல் சமயம் என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளிலும் வேட்பாளர்களாக தங்களை அறிவிக்கவேண்டும் என காத்துக்கிடக்கிறார்கள் நிர்வாகிகள். இதனால் தனக்குப் போட்டியாக வருவார்கள் என நினைப்பவர்களை எல்லாம் எப்படியாவது காலி பண்ண நினைக்கிறார்கள்.

அந்த வகையில் திமுக வின் கள்ளக்குறிச்சி மாவட்ட சங்கராபுர அவைத்தலைவர் எம் எஸ் குமார், அதே கட்சியைச் சேர்ந்த கராஜனை மிரட்டும் ஆடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் ‘நீ எல்லாம் எனக்கு எல்லாம் ஒரு சுண்டக்கா, ரோட்ல விட்டு நாலா பொலந்துருவேன். ரிமோட் மாதிரி உட்கார்ந்த எடத்திலேயே உன்னை அடையாளம் தெரியாம ஆக்கிடுவேன்’ என்றெல்லாம் மிரட்டி ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்கிறார்.  இதை நாகராஜன் ரெக்கார்ட் செய்து சமூகவலைதளங்களில் பரப்பி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News