Categories: Cinema News latest news throwback stories

அம்மாவுக்கு தெரியாமல் அதனை செய்வார் கேப்டன் விஜயகாந்த..! பழம்பெரும் நடிகை நெகிழ்ச்சி பதிவு…

நடிகர் விஜயகாந்த் ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர். ஒரு நடிகராக மட்டுமில்லாமல், இவர் நடிகர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். திரையில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் அவரை பலர் ரியல் ஹீரோ என்று கூறுவது உண்டு.

ஏனென்றால், உதவி என்று கேட்டல் உடனே செய்துவிடும் தங்க மணம் கொண்ட நல்ல மனிதர் இதனால் என்னவோ, இன்னும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் குறையவே இல்லை. விஜய் காந்திற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார்.

இதையும் படியுங்களேன்-ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் தளபதி விஜய்க்கும் புது ஒப்பந்தம்.?! வெளியான சீக்ரெட் தகவல்…

மீண்டும் அவர் சினிமாவில் நடிப்பாரா என பல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இதனையடுத்து, விஜயகாந்த் குறித்து பல பிரபலங்கள் நெகிழ்ச்சியாக சில நேர்காணலில் பேசுவது உண்டு. அந்த வகையில் பழம்பெரும் நடிகை நளினி நெகிழ்ச்சியாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியது ” விஜயகாந்த் அண்ணன் வேற லெவல்.. விஜயகாந்தின் அம்மா விஜயகாந்த்க்கு மதிய உணவு கொண்டு வருவார். அவர் அம்மா மிகவும் கண்டிப்பாக வேறு யாருக்கும் கொடுத்து விடாதே நீ மட்டும் சாப்பிடு என்று கட்டளையிட்டு செல்வார். அந்த சமயம் நான் இருப்பேன் உடனே என்னை விஜயகாந்த் செய்கையில் அங்கு ஒளிந்து கொள் என கூறுவார்.

நானும் அவ்வாறு புரிந்து கொள்வேன் பிறகு அம்மா வெளியே சென்றவுடன் என்னை கூப்பிட்டு தட்டு நிறைய சாப்பாடு வைத்து என்னிடம் கொடுத்து விடுவார். எங்கு தெரிந்த வள்ளல் என்றால் அது அண்ணா மட்டும் தான்” என பேசியுள்ளார்.

Manikandan
Published by
Manikandan