Connect with us

Cinema News

எனக்கு தாலி கட்டிட்டு எவ போட்டோவையோ மாட்டி வச்சிருக்க!.. மனைவியிடம் வசமாக சிக்கிய நம்பியார்…

தமிழ் சினிமாவில் இருந்த பிரபலமான வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நம்பியார். எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் என்றாலே அதில் கண்டிப்பாக நம்பியார்தான் வில்லனாக இருப்பார் என்று கூறும் அளவிற்கு தொடர்ந்து எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்தவர் நம்பியார்.

இதனால் பொது மக்களிடம் எதிர்ப்பை பெற்றார் நம்பியார். கிராமபுரங்களில் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களை படம்பிடிக்கும் பொழுது நம்பியார் அங்கு வீட்டில் எங்காவது சென்று தண்ணீர் கேட்டால் கூட அங்கு இருப்பவர்கள் எம்.ஜி.ஆரை கொலை பண்ண பார்த்தவன் தானே நீ ,என்று கூறி தண்ணீர் கொடுக்க மறுத்து விடுவார்களாம் இதை நம்பியாரே பல இடங்களில் கூறியிருக்கிறார்.

nambiar

nambiar

என்னதான் நம்பியார் படங்களில் பெரும் இளைஞனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்லவராக இருந்துள்ளார். முக்கியமாக பெண்கள் விஷயத்தில் மிகவும் ஒழுக்கமானவர் நம்பியார் என்று பரவலாக சினிமாவில் பேச்சு உண்டு.

ஆனால் நம்பியாருக்கு மிகவும் பிடித்த நடிகை ஒருவர் அப்போது இருந்தார். எம்.வி ராஜம்மா என்கிற அப்போது இருந்த பிரபலமான நடிகை மீது நம்பியாருக்கு பெரும் ஈர்ப்பு இருந்தது.

போட்டோ மாட்டிய நம்பியார்:

அவரை நேரில் பார்த்து அவருடன் சேர்ந்து ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நம்பியார் ஆசைப்பட்டார். அதே போல ஒரு முறை அவரை சந்தித்து அவருடன் போட்டோ எடுத்து அந்த போட்டோவை வீட்டில் பிரேம் செய்து மாட்டி வைத்தார் நம்பியார்.

பிறகு நம்பியாருக்கு திருமணமான பிறகு அவரது மனைவி அந்த போட்டோவை பார்த்துள்ளார், என்னை தாலி கட்டி அழைத்து வந்து விட்டு வேறு ஏதோ ஒரு பெண்ணின் போட்டோவை மாட்டி வைத்துள்ளீர்கள் என கோபமாக கேட்டுள்ளார். மேலும் அந்த போட்டோவை எடுத்து தூக்கி எறிந்து விட்டார். என்னதான் நம்பியார் எம்.ஜி.ஆருக்கே வில்லனாக இருந்தாலும் விரும்பிய நடிகையுடன் போட்டோ எடுத்து மனைவியிடம் இப்படி சிக்கியிருக்கிறார்.

இதையும் படிங்க: நான் ஒரு குட்டி நயன்தாரா ; பெருமை பேசி பல்பு வாங்கிய பிரணிகா : வைரலாகும் ஷாப்பிங் வீடியோ

Continue Reading

More in Cinema News

To Top