×

கிணற்றில் குதித்த நமீதா... அடுத்து நடந்த விபரீதம்... பரபரப்பில் கோலிவுட்

நடிகை நமீதா தனது அடுத்த பட ஷூட்டிங்கில் இருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 
 
 

நடிகை நமீதாவின் கொஞ்சும் தமிழுக்கே ரசிகர்கள் ஏராளம். எங்கள் அண்ணா படத்தில் ஸ்லிம் பியூட்டியாக அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் இருந்திருக்கிறார். தொடர்ந்து, முதல் சீசன் பிக்பாஸில் கலந்து கொண்ட நமீதாவிற்கு போதிய ஆதரவு இல்லாதல் நிலையில், பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார். 

இதை தொடர்ந்து, நடிகர் வீராவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில், தற்போது மியாவ் மியாவ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நமீதா முதன்முறையாக தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.

சமீபத்தில் படப்பிடிப்புகள் நடந்து கொண்டு இருந்தது. அப்போது, அங்கு நமீதாவின் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டு இருந்தது. இதை காண ஊர் மக்கள் திரண்டிருந்தனர். அங்கு நமீதா செல்போனை வைத்து பேசி கொண்டு இருந்தார். திடீரென செல்போன் கிணற்றுக்குள் விழுந்தது. அதை பிடிக்க நமீதாவும் விழுந்திருக்கிறார். இதை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் நமீதாவை காப்பாற்ற ஓடினார்கள். ஆனால், படக்குழு அவர்களை படக்குழுவினர் தடுத்தனர். அப்போது தான் அங்கு நடந்தது படப்பிடிப்பு என்று தெரிய வந்தது. இருந்தும், படப்பிடிப்பில் நமீதா கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News