×

லைட்டா ஸ்லிப் ஆச்சுன்னா கோவிந்தா தான்... ஆபத்தான சுவரில் அசால்ட்டா அமர்ந்திருக்கும் நமீதா!
 

ஆபத்தான சுவரில் அமர்ந்து போஸ் கொடுத்த நடிகை நமீதா!
 
 
லைட்டா ஸ்லிப் ஆச்சுன்னா கோவிந்தா தான்... ஆபத்தான சுவரில் அசால்ட்டா அமர்ந்திருக்கும் நமீதா!

புசு புசு உடம்பை வைத்துக்கொண்டு 2000ம்  காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

அதையடுத்து அழகிய தமிழ் மகன், பில்லா  உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதாவுக்கு நாட்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வருகையால் மார்க்கெட் சரிந்தது.

அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்து ரசிகர்களிடையே பேமஸ் ஆனார். பின்னர் தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார். 

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நமீதா தற்போது bowwow என்கிற படத்தில் துணிச்சலாக நடித்து வருகிறார். தம்மாத்துண்டு சுவர் ஒன்றில் கால்களை நீட்டியபடி அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார். பார்த்து பத்திரமா உட்காருங்க,  போஸ் கொடுக்குறேன்னு பெரிய ரிஸ்க்லா எடுக்குறீங்க என அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News