×

திருப்பதி முன்ன மாதிரி இல்லை... கோயிலை குறை சொன்ன நமீதா... ஓ அப்படி வர்றீங்க

ஏழுமலையானை தரிசனம் செய்தது சந்தோஷமாக இருந்தது. இதற்கு முன்பு வந்தபோது தரிசன ஏற்பாடுகள் நன்றாக இருந்தது. ஆனால் தற்போது கோயிலில் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை.

 
3da81f48-44a8-4164-8162-a98ab5f700a8

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை நமீதா தனது கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் சென்றுள்ளார்.

இருவரும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அத்துடன் கோவில் வளாகத்தில் உள்ள பல்வேறு சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் அவர்களுக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம் ஆகியவற்றை அர்ச்சகர்கள் வழங்கினர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர்.

கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகை நமீதா நிருபர்களிடம் கூறுகையில் " ஏழுமலையானை தரிசனம் செய்தது சந்தோஷமாக இருந்தது. இதற்கு முன்பு வந்தபோது தரிசன ஏற்பாடுகள் நன்றாக இருந்தது. ஆனால் தற்போது கோயிலில் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை "’ என்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News