×

சின்ன இடை.. ஒல்லியான தேகம்.. இணையத்தை கலக்கும் சின்ன வயது நமீதா!

விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நமீதா. ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்த நமீதா மார்க்கெட் டல் அடித்ததால் கவர்ச்சியில் இறங்கினார்.  

 
Namitha

விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நமீதா. ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்த நமீதா மார்க்கெட் டல் அடித்ததால் கவர்ச்சியில் இறங்கினார்.  

குறிப்பாக சரத்குமாருடன் ஏய் படத்தில் 'அர்ஜுனா அர்ஜுனா, அம்புவிடு அர்ஜுனா' என கவர்ச்சியாய் ஆடிய இவர் தமிழக இளசுகள் அனைவரையும் ஆட்டம்காண வைத்தார். இதன்பின் பல படங்களில் கவர்ச்சியாக நடித்த இவர் தலயுடன் பில்லா, தளபதியுடன் அழகிய தமிழ் மகன் படங்களில் கவர்ச்சியில் கலக்கியிருப்பார்.

Namitha
namitha

பின்னர் சினிமாவில் வாய்ப்பு குறையவே மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டார். பின்னர்  பிக்பாஸ் சீசன் 1ல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். பின் 2017 ஆம் ஆண்டு வீரேந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

முன்னதாக ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்ட அவர் ஜெயலலிதா மறைந்தபின் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தற்போது அரசியலிலும் ஆக்டிவாக இல்லாமல் இருக்கும் அவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தை பதிவிடுகிறார்.

Namitha
namitha

இந்நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தன்னுடைய 17 வயது போட்டோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் பார்ப்பதற்கு ஒல்லியாக மிகவும் அழகாக இருக்கிறார். அது மும்பையில் தான் பெற்றோருடன் இருந்தபோது 17 வயதில் நடத்திய முதல் போட்டோ சூட் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த படத்தின்மூலமாகத்தான் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் தான் தேர்வானதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News