தர்மன் படத்திலும் நம்ம மூர்த்தி?!.. அப்ப செம காமெடி கன்பார்ம்!..

 
namo narayanan


சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர் நமோ நாராயணன். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகி தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் 2 படத்தில் அவர் ஏற்ற மூர்த்தி வேடம் அவரை பெரும்பாலான ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.

அதிலும், மூர்த்தி செஸ் விளையாடும் காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு மீம் மெட்டீரியலாகவும் நமோ நாராயணன் மாறினார். இந்நிலையில்தான் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி தற்போது நடித்து வரும் தர்மன் படத்திலும் நாமோ நாராயணன் நடிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது. இயக்குனரிடம் ரஜினியே அவரை ரெக்கமண்ட் செய்ததாக சொல்லப்படுகிறது.

Tags

From Around the web