‘நவோரியா’ படத்தில் AI தொழில்நுடபம்!.. மனம் திறந்த இயக்குநர் சிம்புதேவன்!

 
simbu devan

திரைப்படங்களின் காட்சியமைப்பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்தும், நடிகர் விஜய்யுடனான நட்பு குறித்தும் இயக்குநர் சிம்புதேவன் பகிர்ந்துகொண்ட கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

தமிழ்த் திரையுலகில் தனித்துவமான கற்பனைக் கதைகளையும், புதுமையான காட்சியமைப்புகளையும் திரையில் கொண்டுவரும் இயக்குநர்களில் ஒருவர் சிம்புதேவன். இவரது இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நவோரியா’...இத்திரைப்படம் வரும் டிசம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் சிம்புதேவன், திரைப்படத் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்துப் பேசியுள்ளார்.

தற்போது அலைபேசிகள் வாயிலாகவே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு காட்சிகளை உருவாக்க முடிகிறது. இருப்பினும், அவற்றைத் திரையரங்குகளில் உயர்தரக் காட்சிகளாக, குறிப்பாக 4K தரத்தில் துல்லியமாகக் கொண்டுவருவது சவாலான ஒன்றாகவே இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி திரைப்படத் தயாரிப்பில் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கினாலும், பெரிய திரைக்கான காட்சியமைப்புகளில் தரத்தையும் துல்லியத்தையும் உறுதிப்படுத்துவது அவசியம் என்பதையும் அவரது கருத்துகள் உணர்த்துகின்றன.

விஜய்யுடனான நட்பு குறித்துப் பேசிய சிம்புதேவன்!

இந்தச் சந்திப்பின்போது நடிகர் விஜய் குறித்த கேள்விக்கும் சிம்புதேவன் பதிலளித்துள்ளார். விஜய் எந்தத் துறையில் ஈடுபட்டாலும், அதில் முழுமையான அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செயல்படக்கூடியவர் என்று பாராட்டியுள்ளார். மேலும், விஜய்யைத் தொடர்புகொண்டு தேவையில்லாமல் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றும், இருவரும் தொடர்ந்து நட்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நட்பில் இருக்கிறோம் என்பதற்காக எல்லா இடங்களிலும் சென்று தலையிட வேண்டிய அவசியமில்லை என்ற அவரது கருத்தும் கவனம் பெற்றுள்ளது.

நவோரியா மீதான எதிர்பார்ப்பு!

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நவோரியா’ திரைப்படம் கற்பனை, சாகசம், நகைச்சுவை ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய படைப்பாக உருவாகியுள்ளது. நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர் 18-ஆம் தேதி வெளியாக உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திரைப்படத் தொழில்நுட்பம் குறித்த சிம்புதேவனின் கருத்துகள் தற்போது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளன.

Murugan ..
Murugan ..

5203 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web