நானியின் 'தி பாரடைஸ்' படத்தில் வில்லனாக மிரட்டும் ராகவ் ஜூயல்... வைரலாகும் கேரக்டர் டீசர்!
நானி நடிப்பில் தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் புதிய படம் 'தி பாரடைஸ்'. இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வருகிறார்.
'தசரா' படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் நானி, ஸ்ரீகாந்த் ஒடேலா கைகோர்த்துள்ள படம் என்பதால், இதன் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இதில் ஹீரோயினாக கயாடு லோஹர் நடிக்கிறார். நானிக்கு எதிராக மோதும் மிரட்டலான வில்லன் வேடங்களில் மோகன் பாபுவும், ராகவ் ஜூயலும் நடிக்கின்றனர். இதற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
தற்போது, ராகவ் ஜூயலின் கேரக்டர் டீசரை நானி எக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
My brother #RaghavJuyal
— Nani (@NameisNani) June 19, 2026
as
VIKRAM MALIK.
Madness will unfold soon. #TheParadise https://t.co/xAjSEIbxTr
