ஆக்ஷனில் தெறிக்கவிடும் நானியின் தி பாரடைஸ் டீசர்!
Aug 6, 2026, 18:57 IST
'தசரா' படத்துக்கு பிறகு தெலுங்கு நடிகர் நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா காம்பினேஷனில் உருவாகியுள்ள புது படம் 'தி பாரடைஸ்' (The Paradise).
இதில் நானிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, ராகவ் ஜூயல் ஆகியோர் நடித்துள்ளனர்.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இதற்கு சி.ஹெச்.சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இதன் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர்.
இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் வருகிற செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
