ரத்த வாந்தி எடுத்து வச்சிருக்கானுங்க!.. டீசரை கூட பார்க்க முடியலையே.. நானியின் ‘பாரடைஸ்’ பிழைக்குமா?
ஹிட் தி தேர்ட் கேஸ் திரைப்படத்தில் அதீத வன்முறையை பயன்படுத்திய நானி அதை விட பல லாரி ரத்தத்தை வைத்து ரத்த வாந்தி எடுக்கிறேன் என நடித்துள்ள படம் தான் இந்த தி பாரடைஸ் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது.
அறிமுக டீசரிலேயே ஆபாச வார்த்தைகள் வெளியாகி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. அனிருத் இசையில் வெளியான ஆயா ஷேர் பாடல் ரசிகர்களை கவர்ந்தாலும் நானியின் லுக் எல்லாம் பயங்கர ட்ரோல் ஆனது.
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள டீசரை பார்த்தால் குமட்டிக் கொண்டு தான் வருகிறது. சாப்பிடும் போது தயவு செய்து யாரும் இந்த டீசரை பார்த்து விட வேண்டாம். அந்த அளவுக்கு ரொம்பவே ரத்த வாடை வீசுகிறது.
దిష్టoతా పోవాలే !
— Nani (@NameisNani) August 6, 2026
Dhishti Antha povaaley !#TheParadiseTeaser https://t.co/YQ6yHCv9VF pic.twitter.com/a7i52eDclG
மார்கோ, லோகேஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன்படங்கள்,அனிமல்,துரந்தர் படங்களை கடந்து வன்முறையின் உச்சத்துக்கே சென்று இப்படியொரு படத்தில் நானி ஏன் நடித்தார் என்கிற கேள்வி தான் எழுகிறது.
ஒட்டுமொத்த டீசரிலேயே கயாடு லோஹர் சைக்கிளில் ஏஞ்சல் போல வரும் அந்த ஒரு காட்சி மட்டுமே ஆறுதலாக உள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் வரும் செப்டம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.
கண்டிப்பாக இளைஞர்கள் இந்த படத்தை பார்ப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. டீசரை போலவே படம் இருந்தால் கண்டிப்பாக ஏமாற்றமே மிஞ்சும் என்று கூறலாம். ரியாலிட்டி கொஞ்சமும் இன்றி தனி உலகையே க்ரியேட் செய்து உருவாக்கியது போல ரொம்பவே ஃபேக்காக உள்ளது டீசர்.
