Categories: latest news television

கல்யாணத்துக்கு தடையா இருப்பதே என்னோட அந்த வீடியோதான்!.. நாஞ்சில் விஜயனின் மறுபக்கம்..

சின்னத்திரையில் இவரை ஒரிஜினலாக பார்ப்பது என்பது அரிது. பெரும்பாலும் பெண் வேடங்களில் நடித்து பெண்களே பொறாமை படும் அளவிற்கு அழகில் சொக்க வைக்கும் கதாபாத்திரமாகவே வருபவர். கலக்கப்போவது யாரு, அது இது எது, போன்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து கலக்கி வருபவர் நாஞ்சில் விஜயன்.

தற்போது அறந்தாங்கி நிஷா, பாலா தொகுத்து வழங்கும் கே.பி.ஒய் சாம்பியன்ஸில் தன் திறமையை காட்டி வருகிறார். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக விஜய் டிவியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வரும் நாஞ்சில் விஜயனுக்கு சரியான அங்கீகாரம் இதுவரைக்கும் கிடைப்பது இல்லை என்பது தான் வருத்தம்.

அவருக்கு பின் வந்தவர்களான புகழ், பாலா போன்றோர் இப்போது எந்த நிலைக்கு சென்று விட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நாஞ்சில் விஜயன் மட்டும் இன்னும் அப்படியே லேடி கெட்டப் போட்டுக் கொண்டு மொக்க காமெடிகளை
அடித்து கொண்டு வருகிறார்.

இவரின் கெரியரே கொஞ்சம் சோகமானதாக தான் இருக்கின்றது. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து உடன் பிறந்த தம்பி, தங்கைகளை பெரியம்மா வீட்டில் வைத்து தான் பார்த்து வந்தாராம். அங்கு இங்கு என கிடைத்த வேலைகளை பார்த்துக் கொண்டு
உடன் பிறந்தவர்களை கவனித்து இப்போது தங்கைக்கும் திருமணம் செய்து விட்டார்.

ஆனாலும் நாஞ்சில் விஜயனுக்கு இன்னும் திருமணமே ஆகாமல் அப்படியே தான் இருந்து வருகிறார். அதற்கு சரியான பெரிய ஆள் இல்லை என நாஞ்சில் விஜயன் வருத்தமும் பட்டார். இருந்தாலும் சிறிது நாள்கள் முன்னாடி பெண் கேட்டு போய் எல்லாம் செட் ஆகிவிட்டதாம். அதன் பின் பெண் உறவினர் ஒருவர் நாஞ்சில் விஜயனின்
வீடியோ ஒன்றை பார்த்து திருமணத்தை தடுத்து விட்டாராம்.

vijayan1

ஏற்கெனவே வனிதா – சூர்யா தேவி பிரச்சினையில் நாஞ்சில் விஜயன் மாட்டிக் கொண்டு ஜெயில் வரை சென்றவர். ஆனால் தான் எந்த தவறும் பண்ணவில்லை என்றாலும் அந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலானது. அதை பார்த்து விட்டு
தான் திருமணமே தடைபட்டுக் கொண்டிருக்கிறதாம். இதை கேட்ட ஷகீலா ‘ நான் இருக்கேன், உனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டியது என் பொறுப்பு’ என்று அந்த பேட்டி எடுக்கும் போது கூறினார்.

இதையும் படிங்க : தன்னை தேடி வருவோரின் ஜாதகத்தை கணித்து படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்!.. இப்படியும் ஒருவரா?..

Published by
Rohini