×

வெளியேறிய கௌதம் மேனன்... ரிலீஸுக்கு தயாராகிய நரகாசூரன்...

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நரகாசூரன் படத்தினை விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.
 
 

முதல் படத்திலேயே தனது ட்ரேட்மார்க் முத்திரையை பதிப்பவர்கள் சில இயக்குனர்கள் தான். அதில், கார்த்திக் நரேனும் ஒருவர். முதல் படமாக அவர் இயக்கிய துருவங்கள் பதினாறு படத்தினை பார்த்த அனைவருமே அவருக்கு பெரிய சல்யூட் அடித்தனர். படம் பலரையும் பிரமிக்க வைத்தது. தொடர்ந்து, இயக்குனர் கௌதம் மேனன் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் அவருக்கு அடுத்த படத்துக்கான வாய்ப்பை கொடுத்தார். 

அந்த படம் தான் நரகாசூரன். அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இருந்தும், படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில், படம் பல மாதங்களாக தள்ளிப்போனது. இதனால், கௌதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் இருவருக்கும் ட்விட்டரில் வாய் தகராறு பல நாட்களாக நடந்து வருகிறது.

சமீபத்திய தகவலின் படி, நரகாசூரன் படத்தின் அத்தனை பண பிரச்சனைகளும் பேசி தீர்க்கப்பட்டதாகவும், விரைவில் படத்தின் வெளியீட்டு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, கௌதம் மேனனும் அப்படத்தில் இருந்து விலகிக்கொண்டதாக தெரிகிறது. அதனால், படம் வேறு தயாரிப்பு நிறுவனத்தில் கைக்கு சென்று இருப்பதாகவும் அவர்கள் படத்தினை உடனே வெளியிடும் பணியில் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

முதலில் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், கண்டிப்பாக படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என கார்த்திக் நரேன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News