×

ரொம்ப திட்டுறீங்கடா... வேணாம் வலிக்குது... பதிவிட்ட நட்டி நடராஜ்

ஆபாசமாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்களை குறிப்பிட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் கர்ணன் பட நடிகர் நட்டி நடராஜ்.

 
Dhanushs_Karnan_antagonist_requests_fans_not_to_scold_him_

ஆபாசமாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்களை குறிப்பிட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் கர்ணன் பட நடிகர் நட்டி நடராஜ்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'கர்ணன்' திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அனைவரிடமும் வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் கண்ணபிரான் என்ற போலிஸ் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை தந்திருந்தார் நட்டி நடராஜ். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற தன்னுடைய கதாபாத்திரத்தை திட்டியவர்களுக்காக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடராஜ்.

'கர்ணன்' திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை தந்திருந்தார் நடராஜ். கண்ணபிரான் கதாபாத்திரத்தில் வயதானவர்கள், பெண்கள் அனைவரையும் தாக்கும் கொடூரமான வில்லனாக நடித்திருந்தார். இவரின் நடிப்பிற்கு பலரிடம் இருந்து பாராட்டுக்கள் கிடைத்தாலும், பலர் இவரின் கதாபாத்திரத்தை திட்டவும் செய்தனர்.

இந்நிலையில் தன்னுடைய கமெண்ட்டில் விமர்சனம் செய்யும் நபர்களுக்கு பதிவு ஒன்றை போட்டுள்ளார் நடராஜ். அதில், ஒரு படத்துல நடிக்கிறோம்...அதை விமர்சிக்க பலருக்கு உரிமை உண்டு.. ஆனா original id la வாங்க ... fake id la வராதீங்க.. யாருன்னே புரிஞ்சுக்க முடியல..ஜாஸ்தியா வேற comment பண்றீங்க...abusive language வேணாங்க...என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News