×

பாண்டேவுக்கு முட்டுக்கொடுத்த நட்டி - தீட்டித் தீர்த்த நெட்டிசன்கள்

செய்தியாளர் ரங்கராஜ் பாண்டேவுக்கு ஆதரவாக பேசி ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டி என்கிற நடராஜ் நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.
 

கலாட்டா.காம் இணையதளத்தின் செய்தியாளர் விக்ரமன் சமீபகாலமாக முக்கிய பிரபலங்களை பேட்டி எடுத்து, மற்றவர்கள் கேட்க தயங்கும் கேள்விகளை கூட கேள்விகளை எழுப்பி அவர்களை பதில் சொல்ல  முடியாமல் மடக்கி அவர்களை திணறடித்து நெட்டிசன்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். சமீபத்தில் இவரிடம் திரௌபதி இயக்குனர் மோகன் மாட்டிக்கொண்டு திண்டாடினார். இது பெரிய சர்ச்சையாகவும் மாறியது.

இந்நிலையில், தந்தி தொலைக்காட்சியின் முன்னாள் செய்தியாளர் ரங்கராஜ் பாண்டேவை சமீபத்தில் பேட்டி எடுத்தார். அப்போது அவர் எழுப்பிய பல கேள்விகள் பாண்டேவுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தினாலும் அதை காட்டிக்கொள்ளாமல் பதில் கூறினார். பாஜகவின் ஆதரவாளரான ரங்கராஜ் பாண்டேவை விக்ரமன் பேட்டி எடுத்த விதம் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆனால், மறுபுறம் பாண்டேவின் ஆதரவாளர்கள் விக்ரமனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து நடிகரும், ஒளிப்பதிவாளருமான நடராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ கேள்வியின் நாயகனை  கண்டதெல்லாம்  கேள்வி கேக்குது.... நாயும் நரியும் பாக்க ஒரே மாதிரி  இருக்கும்...  நாயா  நரியான்னு  கண்டு பிடிக்கறது தாண்டா வாழ்க்கை.... சிங்கத்துக்கு பலத்த சோதிக்காத... சோதிக்க கடவுளா இருக்கணும்....’ என பதிவிட்டிருந்தார். இதைக்கண்டு கொதிப்படைந்த நெட்டிசன்கள் அவரை கண்டபடி திட்டி தீர்த்தனர். சில அவருக்கு அறிவுரையும் கூறினர். 

From around the web

Trending Videos

Tamilnadu News