×

நவரசா சூப்பர் அப்டேட்.... வெளியான அதிகாரபூர்வ தகவல்....

பிசி ஸ்ரீராம் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.
 
60b9cc58703b9

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ள ஆந்தாலஜி படமான நவராசாவில் சூர்யா - கௌதம் மேனன் கூட்டணியிலான பகுதியும் உள்ளது. இந்த பகுதியை பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்போது, ​​இந்த படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளன. இதுகுறித்து ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு அப்டேட்டை பகிர்ந்துள்ளார். ஆம், அதன்படி நவரசா வரும் 2021 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூர்யா மற்றும் கௌதம் மேனன் ஒரு வெற்றிகரமான கூட்டணி. காக்க காக்க, வாரணம் ஆயிராம் போன்ற மகத்தான வெற்றிப் படங்களை இவர்கள் வழங்கியுள்ளனர். இப்படங்கள் சூர்யாவின் கரியரில் பல்வேறு வகையிலும் அடுத்த கட்டத்துக்கு செல்ல உதவியது.

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த சூரரைப் போற்று படம் தான் சமீபத்தியது. அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியான இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வாடிவாசல் படத்துக்காக வெற்றிமாறனுடன் கைகோர்த்துள்ளார். தவிர சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும் இயக்குநர் பாண்டிராஜுடன் இணைந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News