என்ன டைனோசர்லாம் வருது?... மிரட்டலான மூடர் கூடம் 2 செகண்ட் லுக்!
2013-ல் வெளியாகி ஹிட்டான' மூடர் கூடம்' படத்தின் பார்ட் 2-வை நவீன் இயக்கி, நடிக்க, இதை 'Grandel பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படம் ஒரே நேரத்தில் தமிழில் 'மூடர் கூடம் 2 மிஷன் பாஸிபில்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'மிஷன் பாஸிபில்' என்ற பெயரிலும் உருவாகி வருகிறது.
இதில் நவீனுடன் இணைந்து 'பிக் பாஸ்' ஓவியா, ராஜாஜ், சென்ட்ராயன் நடித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு அம்ரீஷ் - நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்கள்.
When #MoodarKoodam meets #MissionImpossible
— Naveen Hidhayath (@NaveenFilmmaker) August 5, 2026
It’s #MissionPossible#MoodarKoodam2#மூடர்கூடம்2
DARK COMEDY + FANTASY + ACTION@bKamalBohra pic.twitter.com/hBKLDaIBcC
இன்று காலை இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது, இப்படத்தின் மிரட்டலான செகண்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். இதில் டைனோசர்லாம் இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
