×

சூர்யாவுக்கு நடிக்க தெரியாதுன்னு சொன்னாங்க.. உண்மைதான்.. மிமிக்ரி கலைஞர் பதிவு

 

naveen

 

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் இன்று அமேசன் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தொடக்கம் முதலே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தற்போது இப்படம்  பலராலும் பாராட்டுப்பட்டு வருகிறது. குறிப்பாக சூர்யாவின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. சுதா கொங்கராவின் இயக்கம் மற்றும் ஜி.வி.பிரகாஷின் இசை படத்தை வேறு தளத்திற்கு எடுத்து செல்வதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் அப்துல் கலாம் ஐயா கதாபாத்திரத்தில் வரும் நடிகருக்கு பிரபல மிமிக்ரி கலைஞர் நவீன் முரளிதர் டப்பிங் பேசியுள்ளார்.இவர்னது முகநூல் பக்கத்தில் ‘அப்துல் கலாம் ஐயாவுக்கு டப்பிங் பேசி இப்படத்தில் ஒரு சிறு பகுதியாக பணிபுரிய வாய்ப்பு கொடுத்த சூர்யாவுக்கு நன்றி. உங்களுக்கு நடிக்க தெரியாதுன்னு சொன்னாங்க.. உண்மைதான். உங்களுக்கு நடிக்க தெரியல.. கதாபாத்திரமாவே வாழ்ந்திருக்கீங்க. படக்குழுவினருக்கு என் பாராட்டுக்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Repost: Tanq Surya sir for giving me Ty's wonderful opportunity for being a smal part in dubbing of Our Kalaam iyya's...

Posted by Naveen Muralidhar on Wednesday, 11 November 2020

From around the web

Trending Videos

Tamilnadu News