நவீனின் மூடர் கூடம் 2 Mission Possible ஃபர்ஸ்ட் லுக்!
Aug 5, 2026, 11:33 IST
நவீன் ஹீரோவாக அறிமுகமான படம் 'மூடர் கூடம்'. இதில் நடித்ததுடன், அவரே இயக்குநர் சீட்டிலும் அமர்ந்து டைரக்ட் செய்திருந்தார்.
சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது, இதன் பார்ட் 2 ரெடியாகி வருகிறது.
இதற்கு 'மூடர் கூடம் 2 மிஷன் பாஸிபில்' என டைட்டில் வைத்துள்ளார்கள். இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.
After a Loooooong wait
— Naveen Hidhayath (@NaveenFilmmaker) August 5, 2026
The FOOLS are back
With a bigger bang this time
Dark humour meets Racy Action!!!#MoodarKkodam2#மூடர்கூடம்2#MissionPossible
First Look @bKamalBohra 🙏🏿 pic.twitter.com/TEhwCZBK1q
நவீனே நடித்து, இயக்கும் இதில் பார்ட் 1-ல் நடித்த ராஜாஜ், சென்ட்ராயன், ஓவியா, ஜெயப்பிரகாஷ் ஆகியோரே நடிக்கிறார்கள். படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 5:55 மணிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
