×

சந்திரமுகி, ஜயா படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது... நயன்தாரா நடித்துவிட்டார்!!!

நவ்யா நாயர், தாம் தான் ஐயா படத்துக்கு முதலில்  தேர்வாகயிருந்ததாகவும் அதன் பின்னர் அவருக்கு பதிலாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
 
Navya-Nair-1280x720

ஐயா திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியான பக்கா குடும்பத் திரைப் படமாகும். இதில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க, நாயகியாக நயன்தாரா நடித்தார். உடன் நெப்போலியன் முக்கிய வேடங்களில் நடித்தார். வேடிவேலு, பிரகாஷ் ராஜ், லட்சுமி, ரோஹினி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர்.

ஆனால் இந்த படத்தில் நடித்திருக்க வேண்டியது நயன்தாரா அல்ல, தான் தான் என்று பிரபலமான நடிகை தெரிவித்துள்ளார். அந்த நடிகை வேறு யாரும் அல்ல, அவர் தான் நவ்யா நாயர். ஐயா திரைப்படத்தை இயக்குநர் ஹரி எழுதி இயக்கினார். 

இந்த படத்தை கே.பாலசந்தரின் கவிதாலயா புரொடக்ஷன்ஸ் கீழ் புஷ்பா கந்தசாமி தயாரித்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இந்த படத்துக்கு இசையமைத்தவர் பரத்வாஜ்.

ஐயா படத்தில் தான் கோலிவுட்டில் நயன்தாரா அறிமுகமானார். மேலும் அந்த படத்தில் வரும் “ஓரு வார்த்தை பேச” பாடல் அப்போது மிகவும் பிரபலமானது. இந்நிலையில் தான், இத்தனை வருடங்கள் கழித்து நடிகை நவ்யா நாயர், தாம் தான் ஐயா படத்துக்கு முதலில்  தேர்வாகயிருந்ததாகவும் அதன் பின்னர் அவருக்கு பதிலாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஐயா படத்தை நவ்யா நாயர் ஏன் நிராகரித்தார் என்று கேட்டபோது, ​ அதற்கு குறிப்பிட்ட பெரிய காரணம் எதுவும் சொல்லவில்லை என்றாலும், பின்னர் அவர், உண்மையில் மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வந்ததுதான் முக்கிய காரணம் என்று கூறினார். 

இதேபோல் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் பி.வாசு இயக்கிய சந்திரமுகி படத்திலும் தனக்கு வந்த நடிப்பு வாய்ப்பை நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News