உலகாயகன் கமல்ஹாசன் நடித்து மணிரத்னம் இயக்கி 1987ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். தற்போது வரை பலரது பேவரைட் திரைப்படம். ஏன், தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் பல இளம் இயக்குனர்கள் சினிமாவுக்கு வர காரணமாக இருந்த படம்..
சிறந்த இந்திய படங்கள் டாப் 10 எடுத்தால் அதில் கண்டிப்பாக நாயகன் இடம் பெரும். தமிழ் சினிமாவின் பல கேங்ஸ்டர் படங்களுக்கு முன்னோடி. இந்த திரைப்படம் அன்றைய வருடம் கமலின் சிறந்த நடிப்பிற்காக ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த படத்தை ஒரு நடிகை நல்லா இல்லை என்று கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அதுவும் அப்பட ஹீரோயின் சரண்யா பொன்வண்ணன். தற்போது அம்மா வேடங்களில் கலக்கி வருகின்றரே அவரே தான்.
இதையும் படியுங்களேன் – கேரவன் இருந்தால் ஷூட்டிங் கேன்சல்… கேப்டனின் மனசு உண்மையில் சொக்க தங்கம்யா…
படம் ரிலீசான சமயத்தில் படம் பார்த்துவிட்டு படம் நல்லாவே இல்ல. படத்தில் நான் அழகாவே இல்ல என இயக்குனர் மணிரத்னத்திடம் புலம்பி உள்ளாராம். படம் பார்த்து நல்லா இல்லனு சொன்ன ஒரே நாள் நானாக தான் இருப்பேன் என அண்மையில் ஒரு நேர்காணலில் நடிகை சரண்யா பொன்வண்ணன் கூறினார்.
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…
Vijay TVK:…
Idli kadai…