Categories: Cinema News latest news

உள்ளூர்காரனை வச்சு அமெரிக்காகாரனுக்கு பயத்த காட்டிய தயாரிப்பாளர்!.. ‘நாயகன்’ படப்பிடிப்பில் மணிரத்னத்திற்கே ஆட்டம் காண்பித்த சம்பவம்..

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 1200 படங்களுக்கு மேல் சண்டை பயிற்சியாளராக இருந்தவர் ஜூடோ ரத்னம். இவர் சமீபத்தில் தான் காலமானார். இந்த செய்தி கேட்டு சினிமா பிரபலங்கள் சோகத்தில் மூழ்கியிருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு நேரிடையாக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு போனார்.

kamal1

எம்ஜிஆர் தவிர்த்து ரஜினி, கமல் , சிவாஜி போன்றவர்களுக்கு சண்டை பயிற்சியாளராக இருந்தவர் தான் ஜூடோ ரத்னம். ஏன் மனோரமாவிற்கே சிலம்பு கற்று கொடுத்தவர். மேலும் மற்ற மொழிப் படங்களின் சூப்பர் ஸ்டார்களுக்கும் பயிற்சிகளை கற்றுக் கொடுத்திருக்கிறார். இன்று தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஏகப்ப்ட்ட சண்டை பயிற்சியாளர்கள் இவரிடம் சிஷ்யர்களாக இருந்தவர்கள் தான்.

இதையும் படிங்க : விஜய்க்கு கொக்கிப் போட நினைத்த கமல்… நைசாக நழுவி எஸ்கேப் ஆன தளபதி… என்னவா இருக்கும்!!

எல்லா கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர் ஜூடோ ரத்னம். முரட்டுக்காளை படத்தில் வரும் கடைசி க்ளைமாக்ஸ் காட்சியில் இவரது அபாரத்திறமையை பார்த்து பாராட்டதவர்களே இல்லை. அந்தத் திரைப்படம் முதலே ஜூடோ ரத்னம் மிகவும் பிரபலமானார். இவரது பெருமையை பறை சாற்றும் வகையில் கமலின் நடிப்பில் வெளிவந்த நாயகன் படப்பிடிப்பின் போது ஒரு சம்பவம் அரங்கேறியது.

judo rathnam

நாயகன் படத்தை மணிரத்னம் இயக்க முக்தா சீனிவாசன் தயாரித்திருந்தார். படம் ஒரு கேங்ஸ்டர் படமாக ஆக்‌ஷன் படமாக வெளிவந்து கமலின் திரைவாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக விளங்கியது. அந்தப் படத்திற்காக சண்டைகளை அமைக்க மணிரத்னம் அமெரிக்காவில் இருந்து ஒரு ஃபைட் மாஸ்டரை வரவழைத்திருக்கிறார்.

அதுவும் 5000 டாலர் சம்பளத்தில் அங்கிருந்து அழைத்து வந்தாராம் மணிரத்னம். உடனே முக்தா சீனிவாசன் அந்த ஃபைட் மாஸ்டரிடம் உனக்கு என்னென்ன கலைகள் தெரியும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சில கலைகளை செய்தும் காண்பித்தாராம்.

muktha seenivasan

அதன் பிறகு முக்தா சீனிவாசன் இது என்ன கலை? எல்லா கலைகளையும் கற்று தேர்ந்த ஒருவர் எங்களிடமே இருக்கிறார். அவர்தான் ஜூடோ ரத்னம் என்று சொல்லி சூப்பர் சுப்பராயனை அழைத்து உன் மாஸ்டர் மாதிரியே செய்து காட்டனும் என்று சொல்லி நாயகன் படத்திற்கு சூப்பர் சுப்பராயனை ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிய வைத்திருக்கிறார் முக்தா சீனிவாசன். ஏனெனில் சூப்பர் சுப்பராயன் ஜூடோ ரத்னத்திடம் இருந்து வந்தவர் தான்.

பிறகு வந்த அமெரிக்கரை டிக்கெட் எடுத்து அமெரிக்காவிற்கே வழியனுப்பி வைத்தாராம். ஒரு சின்ன கர்சீஃப் இருந்தாலும் அதில் தன் வல்லமையை காட்டக்கூடியவர் ஜூடோ தங்கம். அவரது வழியை பின்பற்றி வந்தவர்கள் இன்று பல பேர் புகழோடு இருக்கிறார்கள்.

Published by
Rohini