Categories: Cinema News latest news throwback stories

நாயகன் படத்தில் நடந்த சூப்பர் ட்விஸ்ட்…அப்பவே இப்படியா?!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக அமைந்தது நாயகன். கமலின் சூப்பர்ஹிட் படத்தில் முக்கியமானது என்றும் சொல்லலாம். ஆனால் இப்படத்தின் வாய்ப்பு மணிரத்னத்திற்கு அவ்வளவு எளிதாக கிடைத்து விடவில்லை.

கோலிவுட் இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்னம். ஒவ்வொரு படத்திலும் தனக்கென தனி பாணியை உருவாக்கி வைத்திருப்பவர். இவரின் ரோஜா படம் துவங்கி தற்போது வெளியாகி இருக்கும் பொன்னியின் செல்வன் வரை அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் தான் கொடுத்தது.

அதிலும், மணிரத்னத்திற்கு காவியம் என்றால் அவ்வளவு பிடிக்கும் என்று தான் சொல்ல வேண்டும். முதலில் சத்தியவான் சாவித்ரி, அடுத்து மகாபாரதம், தொடர்ந்து ராமயணம் என சில படங்களில் தழுவல்களாக கூறி இருந்தார். முதன்முறையாக நேரடி நாவலை படமாக்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.

முதலில், மணிரத்னம் சினிமாவில் தடுமாறிக்கொண்டிருந்த வேளையில், கமலுக்கு மூன்று கதைகள் கூறி இருக்கிறார். ஆனால், கமலோ இதெல்லாம் கதையா, என்னால் பண்ண இயலாது எனச் சொல்லி அனுப்பி விட்டாராம். பின்னர், ரோஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து மணிரத்னத்தினை சந்திக்க கமல் அழைத்திருக்கிறார். அவரை சந்தித்த கமல், மூன்று கதைகளை கொடுத்திருக்கிறார். ஆனால் மணிரத்னமோ இதில் எதுமே எனக்கு சம்மந்தப்படாத கதைகள் எனக் கூறி மறுத்துவிட்டார். உடனே கமல் சரி நீங்க ஒரு கதை சொல்லுங்க எனக் கேட்டு இருக்கிறார். அதற்கு அவர் கூறிய கதை தான் நாயகன். ஒரு லைன் கதையை மட்டும் கேட்டுவிட்டு கமல் ஓகே சொல்லி இருக்கிறார்.

 

இதையும் படிங்க: கமல்ஹாசன் படத்தில் ஜெயம் ரவியா?? என்னப்பா சொல்றீங்க.. செம மேட்டரா இருக்கே!!

படத்தின் படப்பிடிப்பும் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், படத்தின் முழுகதை அப்போதும் தயாராகவில்லையாம். 75% கதையை வைத்து மணிரத்னம் பாதி படப்பிடிப்பை முடித்துவிட்டார். கிளைமேக்ஸ் காட்சியின் போதே முழு கதை தயாராக எடுத்து வந்திருக்கிறார். இது நடக்குமா என பலர் நினைத்திருக்க, படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily