Categories: latest news

தனுஷ் இறங்கி வந்தும் கெத்து விடாத நயன்தாரா! பிரச்சினையின் ஆரம்பப்புள்ளியே இதுதானாம்

நயன்தாரா மற்றும் தனுஷ் பிரச்சினைக்கு ஒரு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. நாள்தோறும் அவர்களைப் பற்றிய பேச்சுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நயனின் அந்த ஆவணம் படம் பற்றி வலைப்பேச்சில் சில தகவல்களை பகிர்ந்திருக்கின்றனர். அவர்கள் கூறும்போது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஓடும் அந்த வீடியோவில் நயன் மற்றும் விக்கியின் திருமண போர்ஷன் என்பது சில நிமிடங்கள் தான் வருகின்றதாம்.

மற்ற இடங்களில் இந்த உலகத்திலேயே சிறந்த பெண் நயன் என்று விக்னேஷ் சிவன் சொல்வதும் இந்த உலகத்திலேயே ஒரு சிறந்த ஆண் விக்னேஷ் சிவன் என நயன்தாரா சொல்வதும் மாதிரியே அதில் காட்டப்படுகிறதாம். அது மட்டுமல்ல அந்த ஆவணப்படத்தில் பேசி இருக்கும் பல பிரபலங்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான்.

இதையும் படிங்க: படம் சுமாராவே இருக்கட்டும்! அதுக்கு இப்படியா? ‘கங்குவா’ விமர்சனத்தால் ஆவேசமான திருப்பூர் சுப்பிரமணியன்

அவர்கள் ஏதோ லண்டனில் பிறந்து அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் மாதிரி முழுவதுமாக ஆங்கிலத்தில் பேசி இருக்கிறார்களாம். அதில் நெல்சன் மட்டும்தான் தமிழில் பேசி இருப்பதாக வலைப்பேச்சில் கூறியிருக்கிறார்கள் .இதற்கிடையில் நயன் மற்றும் தனுஷின் இந்த பிரச்சனை எப்படி ஆரம்பித்தது என்பதை பற்றியும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

முதலில் என்ஓசிக்காக விக்னேஷ் சிவன் தனுஷின் மேலாளரான ஸ்ரேயஸிடம் அணுகி இருக்கிறார். அப்போது தனுஷ் என்ஓசி கொடுக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம் .அதன் பிறகு நயன்தாரா அவர் சார்பாக ஸ்ரேயஸிடம் தொலைபேசியில் அழைத்து என்ஓசி பற்றி கேட்டிருக்கிறார். அப்போதும் தனுஷ் முடியாது என சொல்லியிருக்கிறார். இருந்தாலும் நயன் தனுஷை நான் சந்திக்க வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் என ஸ்ரேயஸிடம் கூற அதை தனுஷிடம் வந்து சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: தளபதி69 படத்திற்கு இத்தனை இயக்குனர்களிடம் கதை கேட்டாரா தளபதி… லிஸ்ட்டில் இருந்தவரே சொல்லிட்டாரே…

உடனே தனுஷ் சரி நான் அலுவலகம் வரும்பொழுது அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணுங்க என சொன்னதும் ஸ்ரேயஸ் நயன்தாராவிடம்  ‘அவருடைய அலுவலகத்திற்கு வந்து பார்க்க சொல்லியிருக்கிறார்’ என கூறினாராம் . அதற்கு நயன்தாரா  ‘நான் அங்கு வரவேண்டுமா? அவரை இங்க வர செல்லுங்கள்’ என மிகவும் கெத்தாக சொல்லி இருக்கிறார். இதுதான் தனுஷுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

nayanthara

இதற்கிடையில் இன்னொரு அரசியல் நடந்ததாகவும் கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள். இந்த அறிக்கையை வெளியிட்டதும் அவருக்கு ஆதரவாக மலையாள நடிகைகள் பலரும் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் பெரும்பாலும் தனுசுடன் நடித்தவர்கள் தான். அவர்களிடம் முன்பாகவே நயன்தாரா இந்த மாதிரி ஒரு அறிக்கை வெளியிடப் போகிறேன் .நீங்கள் அதற்கு லைக் செய்து உங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டும் என்ற வகையில் டீலிங் பேசியதாக இப்போது இந்த தகவல் வெளியாகி இருக்கிறது..

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini