×

கமல் மகளை பின்னுக்கு தள்ளி சம்பளத்தில் முதலிடத்தில் நயன்! எத்தனை கோடி தெரியுமா?

பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் மீண்டும் துவங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழ் திரையுலகின் நடிகைகளுக்கான சம்பள பட்டியலை தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ளார்களாம். அந்த பட்டியலில்

 

நயன்தாரா தான் முதலிடத்தில் இருக்கிறார். நயன்தாராவுக்கு ரூ. 4 கோடி சம்பளம். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் ரூ. 4 கோடி கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குவது இல்லை. 

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா முதல்முறையாக அம்மனாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் 14ம் தேதி ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லரை பார்த்து அனைவரும் அசந்துவிட்டனர்.

இந்த மூக்குத்தி அம்மன் மட்டும் தியேட்டர்களில் வெளியானால் பாக்ஸ் ஆபீஸ் குயீன் நயன்தாரா தான் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். ஆனால் ஓடிடி தளத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டதால் மூக்குத்தி அம்மன் தியேட்டர்களில் வெளியாக வாய்ப்பே இல்லை.

சம்பள விஷயத்தில் நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் காஜல் அகர்வால் இருக்கிறார். அவருக்கு ரூ. 2 கோடி சம்பளம். த்ரிஷா, தமன்னா ஆகியோர் ரூ. 1.50 கோடியுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள். ரூ. 1 கோடி சம்பளத்துடன் ஸ்ருதி ஹாசன் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News